அம்மாவுக்கு ஓட்டு போட்டா நரகம் தான்
"ஜெயலலிதாவுக்கு பிராமணர் ஓட்டு போட்டால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்" என காஞ்சி பக்தர்கள் பேரவை சார்பில் மயிலாப்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் வளசை ஜெயராமன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
- எஸ்.வி.சேகர் ஒரு துரோகி
- சங்கராச்சாரியார் தமிழகம் முழுவதும் வலம் வந்தாலே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது

- தினமலர் ஜெயலலிதாவுக்கு அடிமையாக மாறி விட்டது
- யாருக்கு ஓட்டு போட்டால் ஜெயித்து கோட்டைக்கு போவார்களோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என சூசகமாக திமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்று தெரிவித்தார்

அசின் சொல்றது என்னான்னா : நம்ம ஆத்து பொண்ணு தான் கருணாநிதி குடும்பத்துல மாட்டுபொண்ணா இருக்கா, அதனால எல்லோரும் உதயசூரியனுக்கு பூணூலை ஒரு கையில புடிச்சிண்டு ஓட்டு குத்துங்கோ அப்படின்னு ராஜாஜி மறுபடியும் சொன்னதா நினைச்சிக்கிங்கோ
பிராமணர்கள் ஓட்டு யாருக்கு
"ஜெயலலிதாவுக்கு பிராமணர் ஓட்டு போட்டால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்" என காஞ்சி பக்தர்கள் பேரவை சார்பில் மயிலாப்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் வளசை ஜெயராமன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
- எஸ்.வி.சேகர் ஒரு துரோகி
- சங்கராச்சாரியார் தமிழகம் முழுவதும் வலம் வந்தாலே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது

- தினமலர் ஜெயலலிதாவுக்கு அடிமையாக மாறி விட்டது
- யாருக்கு ஓட்டு போட்டால் ஜெயித்து கோட்டைக்கு போவார்களோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என சூசகமாக திமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்று தெரிவித்தார்

அசின் சொல்றது என்னான்னா : நம்ம ஆத்து பொண்ணு தான் கருணாநிதி குடும்பத்துல மாட்டுபொண்ணா இருக்கா, அதனால எல்லோரும் உதயசூரியனுக்கு பூணூலை ஒரு கையில புடிச்சிண்டு ஓட்டு குத்துங்கோ அப்படின்னு ராஜாஜி மறுபடியும் சொன்னதா நினைச்சிக்கிங்கோ
அதிமுக ஜெயிச்சா...............
இட்லி-வடை நிமிடத்திற்கு நிமிடம் செய்தி போட்டுண்டே இருப்பா
அம்மா வீட்டில் இருந்து பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்தார், அம்மா வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டார், அம்மா காரில் ஏறிவிட்டார், அம்மா தெருவுக்கு வந்து விட்டார், அம்மா இருமினார், அம்மா கர்ஜித்தார் என போட்டு தாக்குவா
அசின் கேள்வி : நோக்கு நியுஸ் கலெட் பண்றத தவிர வேற வேலை இல்லையா ? எப்ப இந்த வேலையில ஜாயின் பண்ணினேள் ?

வலைப்பதிவு சூப்பர் ஸ்டார் மூகமுடி இப்ப இமயமலைக்கு ரெஸ்ட் எடுக்க போயிருக்கா, அதிமுக ஜெயிச்சா உடனே ஓடி வந்துருவா. வந்து தமிழ்நாட்டு மக்கள் எதிர்கோஷ்டிக்கு ஆப்பு அடிச்சுட்டதா தம்பட்டம் அடிப்பா
அசின் கேள்வி : எல்லோரையும் பார்த்து Grow Up அப்படின்னு சொல்றேளே, நீங்க எவ்வளவு உயரம் ?

லண்டன் அதிமுக உள்வட்ட கிளை தலைவர் ஜெயக்குமார் ரொம்ப சந்தோஷமாகி எல்லா நியுஸ் பேப்பர்ளையும் இருந்து கட்டிங் போட்டு நம்பள் படுத்தி எடுத்துண்டு இருப்பா
அசின் கேள்வி : அவா தான் பத்திரிக்கைகள விளக்கமா போடறாளே, நீங்க வேறு எதுக்கு கஷ்டப்பட்டு வெட்டி ஒட்டி டைம் வேஸ்ட் பண்றேள்

டோண்டு, இதுக்கு எல்லாம் காரணம் சோவோட ஆதரவு தான் அப்படின்னு பதிவு எழுதுவா
அசின் கேள்வி : எலிக்குஞ்சை தூக்கிண்டு எல்லா எடத்துக்கும் போறேளே, பூனை உங்கள துரத்தின அனுபவம் இருக்கா ?

குழலி ராமதாஸ் எத்தனை இடங்கள ஜெயிச்சிருக்கா அப்படின்னு பதிவு எழுவா
அசின் கேள்வி : ரஜினி ராம்கியை விட நோக்கு ரஜினியை ரொம்ப புடிக்குமோ ? ரஜியைப் பத்தி நிறைய எழுதறேளே ?
திமுகவுக்கு பிராமணர்கள் ஆதரவு
இதுவரை இல்லாத அளவுக்கு பிராமண சமுதாயத்தினர் திமுகவுக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு
51.2 சதவீத பிராமணர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 26.8 சதவீதம் பேரே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிராமணர்கள் பரம்பரை எதிரியாக பாவித்து வரும் திராவிடக் கட்சி திமுக. ஆனால் இம்முறை அக்கட்சியே எதிர்பாராத அளவுக்கு பிராமணர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுவதற்கு ஜெயேந்திரர் விவகாரம்தான் முக்கிய காரணம்.

ஜெயேந்திரர் விவகாரத்தில் ஜெயலலிதா மீது பிராமண சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதும் தெளிவாகிறது.
லயோலா கருத்துக் கணிப்பில் திமுக முன்னிலை
அசின் சொல்றது என்னான்னா
அரசன் அன்று கொல்வான், பெரியவா நின்று கொல்வார்
அசின் கேட்கிறார் : ஆத்துக்கா, வீட்டுக்கா
நோக்கு பொழப்பு இல்லையா அப்படின்னு நம்ம ஆத்துல நம்பள எல்லோரும் கரிச்சு கொட்டிட்டா. ஆனாலும் நாம நம்ம அசின் வியாதிய யாராலும் நிறுத்த முடியாமா போயிடுச்சு.
போன போஸ்ட்டுல நமக்கு பத்ரி கழுவற மீன்ல நழுவற மீன்னாட்டம் அப்படின்ற நம்ம ஸ்ரீரங்கம் பொண்ணு ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டு ஓடிப்போயிட்டாரு.
இன்னைக்கு அசின் என்ன கேட்கறான்னா

ஒரு நாள் காத்தால, ஆத்துல ஜலம் குடிச்சிட்டு இருக்கறச்சே, யாரோ கேட்டா, ஜலமா, தண்ணியா அப்படின்னுட்டு.
நோக்கு மட்டும் எதுக்குடா தனி பாஷை அப்படின்னுட்டு கேட்கறா. ஆனா அவா சென்னை சேரியுல ஒன்னு பேசறா, மதுரையில ஒன்னு பேசறா, திருநெல்வேலியில ஒன்னு பேசறா. அதெல்லாம் தமிழா தெரியறச்சே, நம்மோட ஆத்து தமிழை ஏன் ஒத்துக்கமாட்றான்னு நேக்கு புரிஞ்சதே இல்ல...
இன்னைக்கு அசின் கோபமா கேட்கற கேள்வி

ஜயர் தமிழுக்கு அங்கீகாரம் கிடையாதா ?
அசின் கேட்கிறார் : பத்ரி சேஷாத்ரிக்கு ஒரு கேள்வி
தேர்தல் காலத்துல எல்லோரும் நிறைய கேள்விய கேட்டுண்டிருக்கா, நம்ம ஆத்துல இருந்து ரோடு வரைக்கும் எல்லோரும் கேட்கற கேள்வியாலே காது பிச்சிண்டு போறது.
இப்படி கேள்விகள நம்ம கலையுல நாயகி அசின் மூலமா ஏன் கேட்க கூடாது அப்படின்னு நேக்கு தோன்றச்சே, தெரியாத்தனமா காலச்சுவடு படிச்சு தொலைச்சிட்டேன். அதுலையும் நம்ம
பத்ரி எழுதனதை படிச்சவுடன், அட நல்ல கேள்வி கிடைச்சுட்டதே அப்படின்னு நேக்கு குஷி ஆயிடுச்சி
உடனே இந்த கேள்விய பத்ரியை பார்த்து கேட்டு தொலைச்சிடுனும்னு முடிவு எடுத்தாச்சு
நம்ம அசின் கேள்வி என்னான்னா

எல்லா வெப்சைட்டை பத்தியெல்லாம் எழுதனீங்களே, நோக்கு ஏன் தமிழ்மணத்தை பத்தி ஒரு வரி கூட உங்க கட்டுரையில எழுத தோணலை ? வலைப்பதிவுன்னாலே தமிழ்மணம் தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வர்றது.
ஆனா.. நோக்கு ஏன் அது ஞாபகத்துல வரலை
தமிழ்மணத்துக்கும் நோக்கும் ஏதாவது பிசகா ? பொறாமையா ?
தேமேன்னு இருக்கற என்னைப் பாத்து இப்படி கேள்வி கேட்கறீயான்னு கேட்காதீங்க.
நம்ம வெப்சைட்டை பேமஸ் படுத்தற முயற்சின்னு எடுத்துக்காதீங்க. நாயமான்ன கேள்வியுன்னு நினைச்சு பதில் சொல்லுங்க
First Kiss
என்னோட முதல் கதை என்னான்னா ...
First Kiss, தமிழ் படம் தாங்க...

முதல்ல கதாநாயகிய காட்றோம். இந்த கதைக்கு கதாநயாகி ரொம்ப அழகா இருக்கணும். அதனால அழகான பெண்ணுங்க இருக்கிற பஞ்சாபுல இருந்து கோதுமை நிறத்துல ஒருத்தரை இறக்குமதி பண்றோம். இல்லன்னா அசினை கதாநாயகி அக்கிடலாம். இந்த கதைக்கு யாரு கதாநாயகனா போடலாம்னு யோசிச்சு பாக்கறேன், கதாநாயகனும் அழகா,கம்பீரமா இருக்கணும். பேசாம நானே நடிச்சிடலாம்னு பாக்கறேன், என்ன சொல்றீங்க,
சரி..சரி.. வேணாம், நம்ம சூர்யாவை போடலாம், ஆனா அவருக்கே ஒரு 35வயசாச்சி. ஒரு 25வயசுல அழகா யாரும் தமிழ்நாட்டுல இல்லையாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா ?
கதாநாயகன மட்டும் தமிழ்நாட்டுல தேடு, கதாநாயகிய பஞ்சாபுல இருந்து கொண்டு வந்திடுன்னு வலைப்பதிவு மகளிர் அணி தீர்மானம் பண்ணிடும் போலிருக்கே..
சரி..வுடு ஜூட் எஸ்கேப்..
நேரா கதைக்கு வருவோமா....
முதல் ஷாட்டுல கதாநாயகிய காட்றோம்...கதாநாயகி என்ன பண்றான்னு சொல்லுங்க பாக்கலாம்....ஸ்விட்சர்லாந்துல, குட்டை பாவடை போட்டு டான்ஸ் ஆடறான்னு தானே நீங்க நினைக்கிறீங்க, அதாங்க இல்ல,
வேகமா பைக் ஓட்டறாங்க..
என்னது கதாநாயகி பைக் ஓட்றாங்களா ?
ஆமா.. அதுல தான் என்னோட டைரக்டர் டச் தெரியப்போவுது
ஏதோ ஒரு பீச் ஓரமா (எந்த பீச்சு ? கிடைக்கிற தயாரிப்பாளர பொறுத்து இருக்கு, ஹி, ஹி) வேகமா கதாநாயகி பைக் ஓட்டிக்கிட்டு வராங்க, வேகம்னா, அப்படி ஒரு வேகம்
அதைப் ரோட்டோரமா விவேக்+கோ வுடன் இருக்கும் நம்ம கதாநாயகன் பாக்கறான். அவரு பைக் ரேசுல சாம்பியன். நம்ம கதாநாயகி பைக் ஓட்டறத பாத்து இம்ப்ரஸ் ஆயிட்டாரு. உடனே பைக்க எடுக்கறாரு, விவேக் அவரோட வழக்கமான கலாய்க்கல் செய்யறப்பவே நம்ம கதாநாயகன் விவேக்கை பின்னாடி வச்சிக்கிட்டு பறக்கறாரு, விவேக் நடுங்க, சும்மா நச்சுன்னு காமெடி ப்ளஸ் ஆக் ஷன் சீன் வைக்கிறோம்
கதாநாயகன் கதாநாயகியை சேஸ் பண்ண, டக்குன்னு கதாநாயகி பைக்கை ஒரு வெட்டு வெட்டி கதாநாயகன தடுமாற வைக்கறா. கதாநயகன் கீழே விழறான்
கதாநாயகி நக்கலா சிரிக்கிறா. "பைக்க ஓட்ட கத்துக்கோ சின்ன பையா" அப்படிங்கறா
விவேக்கிற்கு கோபம் வருது, யாரப்பாத்து என்னா கேள்வி கேக்கற, எங்க பையன் பைக் ரேசுல இந்தியாவுலியே பெரிய ஆளுங்கறார்.
"யாரு பைக் ஓட்ட தெரியாத இந்தப் பொடிப்பையனா" அப்படின்னு கதாநாயகி சொல்ல, விவேக், கதாநாயகன் கடுப்பாகறாங்க
விவேக் கதாநாயகனோட புராணங்கள எடுத்து சொல்ல
கதாநாயகி "தில்" இருந்தா எங்கிட்ட மோதிப்பாரு அப்படின்னு சொல்றா
யாருகிட்ட சாவலு, சீச்சி அப்படின்னு கதாநாயகன் சொல்ல, கதாநாயகி பொடிப்பையன் அப்படித் தான் சொல்வான்னு சொல்றா
கடுப்பாகிற கதாநாயகன், போட்டியில குதிக்க, சும்மா, சூப்பரா ஒரு பைக் ரைஸ் வைக்கிறோம்.
கதாநாயகி ஆரம்பத்துல இருந்தே பறக்கிறா, கதாநாயகன் வேகமா பறக்கறான், முந்தறான், பிந்தறான் (தமிழா இது...)
அப்புறம் கடைசியா கதாநாயகன் ஜெயிசிட்டான் (தமிழ் படத்துல அப்படித் தான் கண்ணா வைக்கணும்)
இப்ப என்ன பண்ணப் போறன்ற ஸ்டைல்ல கதாநாயகன் லுக் விட, கதாநாயகி வேகமா வந்து நச்சுன்னு ஒரு முத்தம் குடுக்கறா, பைக்ல ஏறி பறந்திடுறா...
கதாநாயகன் வெலவெலத்து நிக்கறான். விவேக் பொறாமையில பாக்கறார்
நான் இங்க ஜகா வாங்கிக்கிறேன், மீதி கதைய நீங்க சொல்லுங்களேன்...
கதைய டெவல்ப் பண்ணலாம்..