திரைக்கதை எழுதலாமா...
சென்னை பீச்சு பக்கம் போயீ இருக்கேளா...
ஏதாவது ஒரு பக்கம் நாலஞ்சு பேர் உட்கார்ந்து சீரியஸா கதை டிஸ்கஷன் பண்ணிண்டு இருப்பா. சினிமா உதவி இயக்குனர்ன்னு இவாளுக்கு பட்டப் பெயர் உண்டு. கோடாம்பாக்கத்தை நளைக்கு நாம் தான் ஆளப் போறம்னு கனவுல் ரீல் ஓட்டிண்டு இருப்பா. ஆனா அவாளுக்கு அந்த நாள் அவ்வளவு ஈசியா வந்திடாது. ஆனா கதை டிஸ்கஷன் மட்டும் டெஸ்லி நடக்கும்.
நான் என்னப் பண்ண போறேன்னா...நானும் உதவி இயக்குனர் தான் (சும்மானாச்சும்). கதைச் சொல்லப் போறேன்...அந்தக் கதையை நீங்க கேக்கப் போறீங்க..விருப்பம் இருக்கிறவங்க என்னோட கமெண்ட்ஸ் மூலமா டிஸ்கஷன் பண்ணப் போறீங்க. கதை எதைப்பத்தி வேணா இருக்கலாம். சொந்த கதை, சோக கதை, சுட்ட கதை, சுடாத கதை, அரைச்ச மாவு, இது வரை அரைக்காத மாவு, ரஜினிக்கு ஏத்த கதை, விவேக்குக்கு ஏத்த கதை, இப்படி எதைப் பத்தி வேணா இருக்கலம்.
அம்மா செண்ட்டிமெண்ட், தாலி செண்ட்டிமெண்ட கதை கூட செல்லலாம். ஆனா...வலைப்பதிவுல யாராவது முட்டை, ஆசிட் வீசினாங்கன்னா, நான் பொறுப்பில்ல
உங்களுக்கும் உதவி இயக்குனர் ஆசை இருக்கா, என்னோட சேர்ந்திடுங்க, ஒரு கூட்டுவலைப்பதிவா ஆரம்பிச்சிடுலாம்
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்ங்க...நம்ம கதையை யார் வேணா சுட்டுக்கலாம். ஆனா நம்மளையும், நமக்கு கமெண்ட கொடுத்து கதையை டெவலப் பண்ணவங்களையும் கவனிச்சிடனும். நீங்களும் கமெண்ட் போட்டு வைங்க..உங்களுக்கு பங்கு கிடைக்குமே..
ஹி...ஹி..
சரி..நான் என்ன கதை சொல்லப் போறேன்னு ரொம்ப எதிர்பார்ப்பா இருக்காதீங்க...நான் நிறையா சுட்டு தான் சொல்லப் போறேன்..சொதப்பலா கூட இருக்கும். ஆனா என்னங்க..கதையை பில்டப் பண்ணறதே டிஸ்கஷன்லை மத்த உதவி இயக்குனர்கள் தரும் யோசனையால தானே. அதை தானே சுட்டு பெரிய இயக்குனரெல்லாம் பிலிம் ஓட்டிண்டு இருக்கா..

என்னோட ஜாயின் பண்ணிடுங்க..வலைப்பதிவுல சில்வர் ஜூப்லி கொடுக்கலாம்..
அவங்களுக்கும் இவங்களுக்கும் ஒரு "இது" என்பது போன்ற பொய்ப் பிரச்சாரங்களைத் தவிர்த்து உண்மைச் செய்திகளையே எழுதுங்கள் நண்பரே. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
Dear Sir,
I am a new face namely semparithi from coimbatore & interesting to share commants with Tamilians as like you.
Requesting you to inform about "How to read the messages using Tamil-font?
Expecting reply
with warm-regards from
K(uppusamy).Semparithi
செம்பருத்தி, செம்பருத்தி, பூவப் போல பெண்ணொருத்தி...
சரி..சரி, விஷயத்திற்கு வரேன்..
Since these are unicode based fonts you can read tamil fonts by default in Windows XP or windows 2000
You can also try installing Latha font
Post a Comment