அதிமுக ஜெயிச்சா...............
இட்லி-வடை நிமிடத்திற்கு நிமிடம் செய்தி போட்டுண்டே இருப்பா
அம்மா வீட்டில் இருந்து பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்தார், அம்மா வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டார், அம்மா காரில் ஏறிவிட்டார், அம்மா தெருவுக்கு வந்து விட்டார், அம்மா இருமினார், அம்மா கர்ஜித்தார் என போட்டு தாக்குவா
அசின் கேள்வி : நோக்கு நியுஸ் கலெட் பண்றத தவிர வேற வேலை இல்லையா ? எப்ப இந்த வேலையில ஜாயின் பண்ணினேள் ?

வலைப்பதிவு சூப்பர் ஸ்டார் மூகமுடி இப்ப இமயமலைக்கு ரெஸ்ட் எடுக்க போயிருக்கா, அதிமுக ஜெயிச்சா உடனே ஓடி வந்துருவா. வந்து தமிழ்நாட்டு மக்கள் எதிர்கோஷ்டிக்கு ஆப்பு அடிச்சுட்டதா தம்பட்டம் அடிப்பா
அசின் கேள்வி : எல்லோரையும் பார்த்து Grow Up அப்படின்னு சொல்றேளே, நீங்க எவ்வளவு உயரம் ?

லண்டன் அதிமுக உள்வட்ட கிளை தலைவர் ஜெயக்குமார் ரொம்ப சந்தோஷமாகி எல்லா நியுஸ் பேப்பர்ளையும் இருந்து கட்டிங் போட்டு நம்பள் படுத்தி எடுத்துண்டு இருப்பா
அசின் கேள்வி : அவா தான் பத்திரிக்கைகள விளக்கமா போடறாளே, நீங்க வேறு எதுக்கு கஷ்டப்பட்டு வெட்டி ஒட்டி டைம் வேஸ்ட் பண்றேள்

டோண்டு, இதுக்கு எல்லாம் காரணம் சோவோட ஆதரவு தான் அப்படின்னு பதிவு எழுதுவா
அசின் கேள்வி : எலிக்குஞ்சை தூக்கிண்டு எல்லா எடத்துக்கும் போறேளே, பூனை உங்கள துரத்தின அனுபவம் இருக்கா ?

குழலி ராமதாஸ் எத்தனை இடங்கள ஜெயிச்சிருக்கா அப்படின்னு பதிவு எழுவா
அசின் கேள்வி : ரஜினி ராம்கியை விட நோக்கு ரஜினியை ரொம்ப புடிக்குமோ ? ரஜியைப் பத்தி நிறைய எழுதறேளே ?
அதிமுக சார்பா அடிக்கடி எழுதும் மாயவரத்து ரமேஷ்குமாரை விட்டுப் புட்டீங்களே அசின்?
Post a Comment